வடகிழக்கு பருவமழை: முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வகையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வகையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார் ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் வட்டத்தில் 6 கிராமங்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 17 கிராமங்களும், குன்னம் வட்டத்தில் 13 கிராமங்களும், ஆலத்தூர் வட்டத்தில் 11 கிராமங்களும் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேற்கண்ட 47 கிராமங்களுக்கும் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, மக்களை வெளியேற்றி பாதுகாத்திடும் குழு, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உறைவிடம் நிர்வகிக்கும் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுக்களில் வருவாய் ஆய்வாளர் குழு தலைவராகவும், உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர்கள் முதல்நிலைக் குழு உறுப்பினர்களாகவும், ஊராட்சி செயலர் அல்லது கிராம உதவியாளர் 2 ஆம் நிலைக்குழு உறுப்பினராகவும் செயல்படுவார்கள். குழு உறுப்பினர்கள் அனைவரும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள முதல் செயல்பாட்டாளர்களுடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு மழைக் காலங்களில் கிராமங்களில் ஏற்படும் அசாதாரண நிலையை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். முதல் செயல்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் மழைவெள்ள காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலரும், கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியரும், வட்ட அளவில் சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர்களும் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அல்லாது துறைகளுக்கிடையான மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
அதிக மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்களை சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், மாணவர் விடுதிகள், பள்ளிவாசல்கள் என, அந்தந்தப்பகுதிகளுக்கு ஏற்றவாறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு தகவல் அளிக்க...
பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால், மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 1077, 18004254556 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...