வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாளை அம்மா திட்டம் முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில்  வெள்ளிக்கிழமை (நவ. 3) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:26 am

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில்  வெள்ளிக்கிழமை (நவ. 3) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் (தெ), வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் (தெ), குன்னம் வட்டம், நன்னை (கி), ஆலத்தூர் வட்டம், சாத்தனூர் ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு,  உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்படும். உடனடியாக தீர்வு காண இயலாத விண்ணப்பங்கள் குறித்து மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் பதில் தெரிவிக்கப்படும்.
எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரியலூரில்... :
அரியலூர் மாவட்டத்திலுள்ள 4 வட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (நவ.3)  அம்மா திட்டம் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட  ஆட்சியர் க. லட்சுமிபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரியலூர் வட்டம், குலமாணிக்கம் கிழக்கு, அழகியமணவாளம், உடையார்பாளையம் வட்டம், சூரியமணல், பிச்சனூர், ஆண்டிமடம் வட்டம், குவாகம், செந்துறை வட்டம், பெரியக்குறிச்சி ஆகிய கிராமங்களில் அம்மா திட்டம் முகாம் நடைபெறும்.
வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு, ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக  தீர்வு வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.