2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் கைது

குன்னம் அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.  

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:44 pm

DIN

குன்னம் அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.  
திருச்சி ரயில் நிலையம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபால் மகன் ஜாக்கப் (21). இவர், குன்னத்தை அடுத்த நன்னை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 13 வயதுள்ள 9 ஆம் வகுப்பு மாணவிக்கும், ஜாக்கப்புக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி முதல் அந்த மாணவியை காணவில்லையாம்.  இதையடுத்து, மாணவியின் தந்தை அண்ணாமலை அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜாக்கப்பையும், மாணவியையும் பெரம்பலூர் போலீஸார் திருச்சியில் வியாழக்கிழமை மீட்டனர். இதையடுத்து, மாணவியை கடத்திய ஜாக்கப்பை போலீஸார் கைது செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.