பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் கைது
குன்னம் அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.


குன்னம் அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி ரயில் நிலையம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபால் மகன் ஜாக்கப் (21). இவர், குன்னத்தை அடுத்த நன்னை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 13 வயதுள்ள 9 ஆம் வகுப்பு மாணவிக்கும், ஜாக்கப்புக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி முதல் அந்த மாணவியை காணவில்லையாம். இதையடுத்து, மாணவியின் தந்தை அண்ணாமலை அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜாக்கப்பையும், மாணவியையும் பெரம்பலூர் போலீஸார் திருச்சியில் வியாழக்கிழமை மீட்டனர். இதையடுத்து, மாணவியை கடத்திய ஜாக்கப்பை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...