காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 41 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உச்ச நீதிமன்றம் அளித்த 6 வாரக் கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி புதன்கிழமை அரியலூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 41 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, அரியலூர் அண்ணா சிலையில் இருந்து ரயில் நிலையத்துக்கு பேரணியாகச் சென்ற அவர்களை, கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தடுத்து நிறுத்தி, அரியலூர் போலீஸார் கைது செய்தனர். போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் தண்டபாணி, திருமானூர் ஒன்றியச் செயலாளர் ஆறுமகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








