வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு: தி.மு.கவினர் போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து, வி.களத்தூர், பசும்பலூர் ஆகிய இடங்களில் தி.மு.கவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:24 am IST

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து, வி.களத்தூர், பசும்பலூர் ஆகிய இடங்களில் தி.மு.கவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் நிர்வாகப் பதவிக்கு போட்டியிட பலர் விண்ணப்பித்திருந்தனர். செவ்வாய்க்கிழமை மாலை வரை இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அ.தி.மு.கவைச் சேர்ந்த 11 பேரின் விண்ணப்பம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்து, இறுதி வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வெளியிடப்பட்டது. 
இதையறிந்த தி.மு.கவினர் மாவட்ட செயலாளர் சி. ராஜேந்திரன் தலைமையில், வேப்பந்தட்டை ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன், நகரச் செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன் ஆகியோர் வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை புதன்கிழமை முற்றுகையிட்டனர். தகவலறிந்த  மங்களமேடு சரக துணை கண்காணிப்பாளர் கார்த்திக், அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.  
 இதேபோல, வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகப் பதவிக்கான இறுதிவேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலிலும்  அ.தி.மு.க-வினரின் பெயர்களே இடம்பெற்றிருந்தது. 
இதையறிந்த, தி.மு.க-வினர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சி. ராஜேந்திரன் தலைமையில் பசும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் செய்தனர். 
பின்னர், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்ற தி.மு.கவினர், வி. களத்தூர், பசும்பலூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகப் பதவிகளுக்கான தேர்தலை ரத்து செய்யக் கோரி மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.