பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்ட அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், அ10 மாதங்களாக வேலையில்லாமல் இருக்கும் அனைத்து புதுவாழ்வுத் திட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். 12 ஆண்டு அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு டிஎன்ஆர்டிபி திட்டத்தில் எந்த நிபந்தனையும் இன்றி அனைத்து பணியாளர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும். 2017 ஜூன் முதல் 2018 மார்ச் வரை வேலையில்லாமல் இருக்கும் புதுவாழ்வுத் திட்ட பணியாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து கணக்காளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அரியலூர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய பின்தங்கிய மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பு தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்க மாவட்டத் தலைவர் ஆ.பெ.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






