பெரம்பலூரில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் எதிரே, கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையமான பெரம்பலூர் ஸ்ரீ சாரதா தேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநிலத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட அமைப்புச் செயலர் சிலம்பரசன், மாவட்டச் செயலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் வேல்முருகன், மகளிரணிச் செயலர் எழிலரசி, தனியார் பள்ளி செயலர் ஜார்ஜ்ராலிண்டர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி னர்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7- வது ஊதியக் குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களின் ஊதிய முரண்களைக் களைந்திட வேண்டும். கோடை விடுமுறையில் பிளஸ் 1 விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட இணைச் செயலர் ராமன், கல்வி மாவட்டத் தலைவர் காமராஜ், செயலர் பொன்னுதுரை, பொருளாளர் குழந்தைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவிற்கு விசிக ஆதரவா? - திருமாவளவன் விளக்கம்!

த்ரிஷ்யம் 3 படத்தின் டிரைலர் அப்டேட்!

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்

நாட்டில் ஒரு லட்சம் பள்ளிகளில் மின் வசதி, கழிப்பறைகள் இல்லை! நீதி ஆயோக்
வீடியோக்கள்

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

