மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கூலித்தொகையாக ரூ. 380 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் சி.ஐ.டி.யு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவர் கே. கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எ. அபிமன்னன், என். வேல்முருகன், ஜெ. ஜெயபால், கே. கோவிந்தராஜ், என். ராஜா, சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிஐடியு மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மின்ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலர் எஸ். அகஸ்டின், துணைத் தலைவர் ஆர். கண்ணன், இணைச்செயலர் ஆர். ராஜகுமாரன் உள்பட 150-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








