வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

குரும்பலூரில் குறுவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி

குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கால்பந்துப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:54 am IST

குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கால்பந்துப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் த.கஜபதி தொடக்கி வைத்தார். 14, 17, 19 வயதுக்குள்பட்ட  மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டியின் நடுவர்களாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ.தனபாலன், ஸ்டான்லி, என்.கவிதா, தங்கவேல் ஆகியோர் செயல்பட்டனர். இதில் 19, 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணிவிகள் முதலிடமும், எளம்பலூர் அரசு  மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பெற்றனர். 
14 வயதுக்கானோர் பிரிவில் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடமும், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர்.  தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி இணைச் செயலர் சே.அதியமான், உதவித் தலைமை ஆசிரியர் அ.ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் கா.குருசாமி, பள்ளி செயலர் மு.ஜோதிவேல், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.