கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வடட்ம், நெய்குப்பை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேப்பந்தட்டை ஒன்றிய செயலர் எ. முருகேசன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மனோஜ்குமார், சி. கோவிந்தன், அண்ணாமலை, எஸ். விஜயகுமார், டி. அறிவழகன், எஸ். செங்கமலை, என். வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் எம். சின்னதுரை தமிழக அரசின் செயல்பாடு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாளந்துறை - சின்னக்கல்பூண்டி இடையில் உள்ள வெள்ளாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும். நெய்குப்பை கிரமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவநத்தம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ஒன்றியச் செயலர் எம். முருகேசன் கட்சி வளர்ச்சிக்காக ரூ. 42 ஆயிரம் வழங்கினார். இதில், மாவட்ட செயலர் ஆர். மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். அழகர்சாமி, எ. கலையரசி, எஸ். அகஸ்டின், கரும்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


