ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இலவச கண் பரிசோதனை முகாம்: 600 பேர் பங்கேற்பு

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 600 பேர் பங்கேற்றனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 12:58 am

DIN

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 600 பேர் பங்கேற்றனர்.
அரிமா சங்கம் சார்பில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவசக் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம், அரிமா சங்கத் தலைவர் ஜி.என். ஒஜீர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. சாசனத் தலைவர் மு. ராஜாராம், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி முகாமை தொடக்கி வைத்து பார்வையிட்டார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசவன், மருத்துவர் ஆனந்தமூர்த்தி, கண் சிகிச்சை முகாம் மாவட்டத் தலைவர் பாண்டியராஜன், மண்டலத் தலைவர் மணிகண்டேஷ்வரன், வட்டாரத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். 
முகாமில், கண்புரை உள்ளவர்கள், சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணின் கருவிழியில் புண் உள்பட கண் தொடர்பான நோய்கள் மற்றும் குறைபாடு உடையவர்கள் என 600 பேர் கலந்து கொண்டனர். மருத்துவக் குழுவினர் கண்களை பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். 
மேலும், 60 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. 300 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  ஏற்பாடுகளை, அரிமா சங்க நிர்வாகிகள் முரளிதரன், ராஜா, ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.