பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை பெரம்பலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவிபாலன் (23). இவர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நின்றிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பெரம்பலூர் ராஜாநகரை சேர்ந்த ரவிசங்கர் (43), கத்தியை காட்டி மிரட்டி கவிபாலனிடம் பணம் பறிக்க முயன்றாராம்.
இதுகுறித்து கவிபாலன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ரவிசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.