என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பணி வரன்முறைப்படுத்த செவிலியர்கள் வலியுறுத்தல்

மருத்துவத் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என செவிலியர் சங்க அமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :23 ஜூலை 2018, 8:54 am IST

மருத்துவத் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என செவிலியர் சங்க அமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட மருத்துவத் தேர்வாணைய செவிலியர்கள் மேம்பாட்டு சங்க அமைப்புக் கூட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் இரா. சகுந்தலா தலைமை வகித்தார்.   சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மேம்பாட்டு சங்க மாநிலத் தலைவர் க. கோபிநாதன், அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் கே. ஆளவந்தான் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர். கூட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், இதர செவிலியர்களுக்கு வழங்கப்படுவதைபோல் மருத்துவ தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து வழங்க வேண்டும். மருத்துவத் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து பணி வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். 
பணியிட மாறுதல் கலந்தாய்வின்படி, உடனடியாக அனைவருக்கும் விடுவிப்பு ஆணை வழங்க வேண்டும். அதிக பணிச் சுமைக்கும், மன உளைச்சலுக்கும் தள்ளப்படுவதை தவிர்க்க, காலியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் விஷ்ணு, நிர்வாகிகள் ரவி, பன்னீர்செல்வம் உள்பட செவிலியர்கள் பலர் பங்கேற்றனர். 
மாவட்ட செயலர் ஆனந்த் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.