தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மகன் திட்டியதால் விஷம் குடித்து தாய் சாவு

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் மகன் திட்டியதால் விஷம் குடித்து தாய் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :21 மே 2018, 9:20 pm

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் மகன் திட்டியதால் விஷம் குடித்து தாய் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி கமலம் (55). இவருக்கு, துரைராஜ், ராஜேந்திரன் ஆகிய  இரண்டு மகன்கள் உள்ளனர். கமலம் ராஜேந்திரன் வீட்டில் வசித்து வந்தார்.  இந்நிலையில், அவரது மகன் துரைராஜ், மது போதையில் தாய் கமலத்திடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை தாயாரிடம் வழக்கம்போல் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த கமலம் விஷம் குடித்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.