நீடித்த மானாவாரி இயக்கத்தின் கீழ், வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர மையங்கள் அமைப்பதற்கு தகுதியான உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உற்பத்தியாளர் குழுவினர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் கல்பாடி, பேரளி ஆகிய இடங்களில் மதிப்புக்கூட்டு இயந்திர மையம் அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது தேவைக்கு இந்த மையங்களை அணுகி மதிப்புக் கூட்டப்பட்ட விளைபொருள்களை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல, நடப்பு நிதியாண்டிலும் 2 ஆம் கட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 4 மதிப்புக்கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பு மேம்பாட்டுக் குழு, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளருக்கு விண்ணப்பத்தை பரிந்துரை செய்யும்.
பின்னர், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழு ஒப்புதல் பெறப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி செயற்பொறியாளரால் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கிட பணியாணை வழங்கப்படும். இயந்திரங்கள் வழங்கப்பட்டு, மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் நிறுவப்பட்ட பின் ஆய்வு செய்யப்பட்டு இயந்திரங்கள் திருப்திகரமாக செயல்படுகிறது என்ற அறிக்கை பெற்ற பிறகே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொகுப்பு மேம்பாட்டக் குழு மூலம் மானியத்தொகை விடுவிக்கப்படும்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்களது விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட தொகுப்பு மேம்பாட்டுக் குழுவுக்கு அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர், ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஐடி பி.டெக். ரேங்க் பட்டியல் வெளியானது! கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?

சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு விழாவில் மோடி!

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் கடிதம்

எம்எல்ஏ- வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி! | EPS |
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
