‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

முன்னாள் படைவீரர் வாரிசுகள் பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசுப் பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும்

Updated On :8 அக்டோபர் 2018, 8:43 am IST

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 அரசுப் பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பரிசு பெற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
முதல் மற்றும் 2-ஆம் இடம்  பெறுபவர்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரமும், ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் மூலம் ஏற்கெனவே பெறப்பட்ட ஆவணங்களின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 1,200-க்கு 1,034 மதிப்பெண்களும், இரண்டாம் மதிப்பெண் 1,200-க்கு 1,028 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.   எனவே, பிளஸ் 2 தேர்ச்சியுற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் மேற்கண்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அக். 15-க்குள் அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு மதிப்பெண் சான்று, பள்ளி மாற்றுச்சான்று, அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.