பெரம்பலூர் அருகேயுள்ள மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பகுதியில் திங்கள்கிழமை (பிப். 25) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான குரும்பலூர், பாளையம், புது ஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு சாலை, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









