திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்  இரண்டாம் கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 7:23 am IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்  இரண்டாம் கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் எஸ். கார்த்திகேயன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள் :
அரியலூரில் ஜன.25 ஆம் தேதி நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற பணியாற்றுவது, இரண்டாவது கட்டமாக கட்சி உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தீவிரப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநிலப் பொருளாளர் எம். ரெங்கசாமி, அமைப்புச் செயலர்கள் ஆர். மனோகரன், சாருபாலா ஆர்.தொண்டைமான், பண்ணைவயல் சு.பாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலர்கள் சேகர், செ. வீரமுத்து, நாகராஜன், வழக்குரைஞர் பிரிவு மாநிலத் துணைச் செயலர் குலோத்துங்கன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலர் கலைவாணன், மாவட்ட மகளிரணிச் செயலர் பூங்கோதை, இணைச் செயலர்கள் மைதிலி, கெளரி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக, மாவட்ட மாணவரணியைச் சேர்ந்த ஜீவானந்தம் வரவேற்றார். நிறைவில்,  நகரச் செயலர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.