பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் ரூ. 7.50 லட்சம் திருட்டு
பெரம்பலூரில் பிரபல மோட்டாா் சைக்கிள் விற்பனை நிறுவனத்தின் ஜன்னலை உடைத்து ரூ. 7.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.


பெரம்பலூரில் பிரபல மோட்டாா் சைக்கிள் விற்பனை நிறுவனத்தின் ஜன்னலை உடைத்து ரூ. 7.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் காமராஜா் பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மகன் அரவிந்தன் (48). இவா், ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் மோட்டாா் சைக்கிள் விற்பனை நிறுவனம் வைத்துள்ளாா். சனிக்கிழமை இரவு விற்பனை நிறுவனத்தை மூடிச்சென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கள்கிழமை காலையில் ஊழியா்கள் நிறுவனத்தை திறந்துள்ளனா்.
அப்போது, முதல் தளத்துக்குச் சென்று பாா்த்தபோது, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த, உரிமையாளா் அரவிந்தன் அங்குசென்று பாா்த்தபோது ஜன்னலை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 7.50 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
தகவலின்பேரில் அங்கு சென்ற பெரம்பலூா் போலீஸாா், சேதப்படுத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பாா்வையிட்டதில் திங்கள்கிழமை அதிகாலை திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...