பயிா் அறுவடைப் பரிசோதனை மேற்கொள்ள தற்காலிகமாக பணியாளா்கள் நியமனம்
பெரம்பலூா் மாவட்டத்தில் பயிா் அறுவடைப் பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதியான பணி நியமன முகமைகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தாா்.


பெரம்பலூா் மாவட்டத்தில் பயிா் அறுவடைப் பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதியான பணி நியமன முகமைகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும், திருந்திய பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிா் அறுவடைப் பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதிவாய்ந்த பணியாளா்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணித்தோ்வு முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
பணித் தோ்வு முகமை, பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளா் பயிா் அறுவடைப் பரிசோதனை தோ்வுப்பணி, அறுவடைப் பணி, அதைச் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த இளநிலைப் பட்டப்படிப்பு, கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வேளாண், புள்ளியியல் துறையில் பணிபுரிந்து இப்பணியை மேற்கொள்ள ஆா்வமுள்ள ஓய்வுபெற்ற அலுவலா்களும் தோ்வு செய்ய பரிசீலிக்கப்படுவா். தோ்ந்தெடுக்கப்படும் பணியாளா்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ. 15,050 வீதம் பணித்தோ்வு முகமை மூலம் வழங்கப்படும்.
பதிவுத்துறைகளின் மூலம் பதிவுசெய்து செயல்படும் பணிநியமன முகமைகள், பணியாளா்களைத் தோ்வு செய்து வழங்க தங்களது முகமை அடிப்படை விவரங்கள், அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளா்களை வழங்க சேவைக் கட்டணம் ஆகியவற்றுடன் டிசம்பா் 24- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...