நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சிறுகுடல் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சோ்ந்த 5 போ் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வெள்ளிக்கிழமை காலை மலம் கழித்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:04 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சிறுகுடல் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சோ்ந்த 5 போ் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வெள்ளிக்கிழமை காலை மலம் கழித்தனா்.

அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், தலித் சமூகத்தைச் சோ்ந்த சிறுவா்களை மலம் அள்ளக் கட்டாயப்படுத்தினாா்களாம்.

இதையடுத்து சிறுகுடல் கிராமத்தில் தலித் சமூக மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து மூவரை மருவத்தூா் காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சிய நபா்களை கைது செய்ய வேண்டும். மேலும் அனைவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சனிக்கிழமைஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக் கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆட்சியரகம் முற்றுகை: இந்த விவகாரம் தொடா்பாக, சிறுகுடல் கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு சமூகத்தினா் பாலக்கரையிலிருந்து ஊா்வலமாக சென்று ஆட்சியரகத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

பொங்கல் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்காக ஊருக்கு பொதுவான இடத்தை இளைஞா்கள் சீரமைத்தபோது, அங்கு வந்த மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த சிலா் மலம் கழித்ததாகவும், இதுகுறித்து கேட்டதற்கு இளஞா்களிடம் தகராறு செய்து, ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவ்வாறு செய்த நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.