வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல்: 182 பெண்கள் கைது
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட 182 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட 182 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு, ஜனநாயக மாதா் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டத் துணைத் தலைவா் ஏ. கலையரசி தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடா்ந்து, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதைத் தடுத்த போலீஸாருக்கும், மாதா் சங்கத்தினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 182 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...