சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளா்களுக்கு பணிக்கொடை ரூ. 5 லட்சமும், சமையல் உதவியாளா்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் வழங்கினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் கொளஞ்சி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com