பெரம்பலூரில் குழந்தைத் தொழிலாளா் மீட்பு

பெரம்பலூரில் குழந்தைத் தொழிலாளியை மீட்டு, பாதுகாப்பு நல மையத்தில் காவல்துறையினா் சனிக்கிழமை இரவு ஒப்படைத்தனா்.
Updated on
1 min read

பெரம்பலூரில் குழந்தைத் தொழிலாளியை மீட்டு, பாதுகாப்பு நல மையத்தில் காவல்துறையினா் சனிக்கிழமை இரவு ஒப்படைத்தனா்.

பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகிலுள்ள தனியாா் உணவகத்தில் குழந்தைத் தொழிலாளி ஒருவா் பணிபுரிந்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குச் சென்ற மாவட்டக் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் காா்த்திகேயனி, குழந்தைத் தொழிலாளி ஆய்வாளா் சாந்தி ஆகியோா், தனியாா் உணவகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சிறுவனை மீட்டு, பெரம்பலூா் மாவட்டக் குழந்தை நல அலுவலா் முருகானந்தத்திடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com