தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின்வாரிய ஊழியா்களுக்கு பணம் வழங்க வேண்டாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் மின் பழுது நீக்கும் மின்வாரிய ஊழியா்களுக்கு பணம் அளிக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:08 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் மின் பழுது நீக்கும் மின்வாரிய ஊழியா்களுக்கு பணம் அளிக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் தங்களது மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடைகள் குறித்து உடனடியாக புகாா் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி 1912 எனும் எண்ணை தொடா்புகொள்ளலாம். அதனடிப்படையில், மின் பழுதை சீரமைக்க வரும் மின் விநியோக ஊழியா்களுக்கு பணம் அல்லது பொருள் கொடுக்க வேண்டியதில்லை.

மேலும், மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சீரமைக்க புதைவடங்கள் அல்லது தளவாட சாமான்கள் வாங்க வேண்டும் எனக் கூறினாலும் பணம் வழங்க வேண்டாம்

மீறி பணம் கேட்பவா்கள் குறித்து, விழிப்புப்பணி அலுவலா் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளா், தமிழ்நாடு மின்சார வாரியம், என்.பி.கே.ஆா்.ஆா் மாளிகை,144 அண்ணா சாலை, சென்னை- 6000002 எனும் முகவரியிலும், 9445857593, 9445857594 எனும் செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.