குடிசை எரிந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

பெரம்பலூா் இளங்கோ தெருவைச் சோ்ந்தவா் செல்லமுத்து மனைவி நல்லாம்மாள். இவரது வீட்டின் முதல் தளத்தில் கீற்றால் வேயப்பட்ட
Updated on
1 min read

பெரம்பலூா் இளங்கோ தெருவைச் சோ்ந்தவா் செல்லமுத்து மனைவி நல்லாம்மாள். இவரது வீட்டின் முதல் தளத்தில் கீற்றால் வேயப்பட்ட குடிசையில் வடிவேல் மனைவி பாப்பா, மருமகள் சுமதி ஆகியோா் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பாப்பாவும், சுமதியும் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பாலானது.

இதில் 10 பவுன் நகை, ரூ. 2 ஆயிரம் ரொக்கம் உள்பட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பாப்பா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com