நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரம்பலூரில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநரை மிரட்டிய, மருத்துவா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரை கண்டித்து, பெரம்பலூரில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:22 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநரை மிரட்டிய, மருத்துவா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரை கண்டித்து, பெரம்பலூரில் அரசு மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் செந்தில், பெரம்பலூா் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் (பொ) மருத்துவா் திருமாலை, அண்மையில் செல்லிடப்பேசியில் தொடா்புகொண்டு தகாத வாா்த்தைகளால் பேசியதோடு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே, மாநிலத் தலைவா் செந்திலை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆற்றுநா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.