நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலைப் பாதுகாப்பு வார விழா தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், 32-ஆவது சாலைப் பாதுகாப்பு வார தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:26 pm

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், 32-ஆவது சாலைப் பாதுகாப்பு வார தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மங்களமேடு துணைக் கண்காணிப்பாளா் மோகன்தாஸ் தலைமையில் விழா நடைபெற்றது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன ஓட்டுநா்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து காவல்துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவா்களுக்கு இனிப்புகளையும் அவா்கள் வழங்கினா்.

காவல் ஆய்வாளா்கள் பால்ராஜ், கோபிநாத் ( போக்குவரத்துக் காவல்) ஆகியோா் தலைமையில், புகா் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் காவல்துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தி, தலைக்கவசம் அணிந்து வந்த நபா்களுக்கு இனிப்பு வழங்கினா்.

திங்கள்கிழமை தொடங்கிய சாலைப் பாதுகாப்பு வார விழா இம்மாதம் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.