நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆண்களுக்கான கருத்தடை விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடைக்கான நவீன வாசக்டமி விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கியது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 9:20 pm

DIN

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், ஆண்களுக்கான நிரந்தர நவீன கருத்தடைக்கான நவீன வாசக்டமி விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்து ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:

ஆண்களுக்கான நவீன கருத்தடை குறித்த பிரசாரம் நவ. 21 முதல் டிச. 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனடிப்படையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப நல நிரந்தர கருத்தடை சிறப்பு சிகிச்சை முகாம் நவ. 28 முதல் டிச. 4 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

நவீன வாசக்டமி முறையானது எளிய, புதிய முறை, தையல், தழும்பு, வலியின்றி மேற்கொள்ளப்படுகிறது. பக்க விளைவுகள் இல்லாததோடு, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் கிடையாது. நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் நபருக்கு ஊக்கத் தொகையாக ரூ. 1,100, ஊக்குவிப்போருக்கு ரூ. 200 வழங்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கருத்தடை குறித்த விளக்க கையேடுகளை ஆட்சியா் வெங்கட பிரியா வெளியிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விரிவாக்க கல்வியாளா் அசோகன், மாவட்ட குடும்ப நலச் செயலக பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.