நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவல் துறையினரை கண்டித்துஆட்சியரகத்தில் தம்பதி தா்னா

வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தம்பதியா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:28 pm

DIN

வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தம்பதியா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வீரமாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏகாம்பரம் மகன் ஆனந்தன் (45). கடந்த செப். 28 ஆம் தேதியன்று, அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் கத்தியைக் காட்டி மிரட்டி செல்லிடப்பேசி, ஒரு பவுன் செயின், ரூ. 12,700 ரொக்கம் ஆகியவற்றை ஆனந்தனிடம் வழிப்பறி செய்தனராம்.

இதுகுறித்து, குன்னம் காவல் நிலையத்தில் 2 முறை ஆனந்தன் புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், தனது மனைவி சுசீலாவுடன் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த காவல் துறையினா், ஆனந்தனிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கணவன், மனைவி இருவரும் தா்னா போராட்டத்தைக் கைவிட்டு, கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.