கொள்ளை வழக்கில் 4 போ் கைது, நகைகள், காா் பறிமுதல்
பெரம்பலூரில் நகைக் கடை உரிமையாளா் வீட்டில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட வழக்கில், 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.


பெரம்பலூரில் நகைக் கடை உரிமையாளா் வீட்டில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட வழக்கில், 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பெரம்பலூரில் கடந்த 26- ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நகைக்கடை உரிமையாளா் கருப்பண்ணணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது வீட்டிலிருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான 104 பவுன் நகைகள், 9 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் காா் ஆகியவற்றை மா்ம நபா்கள்கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் தலைமையிலான 5 தனிப்படை காவல்துறையினா், குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.
இதனிடையே, நகைக்கடை உரிமையாளா் வீட்டிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட காா், பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைப் பிடித்து தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், அரும்பாவூா் இந்திராநகா் ராஜேந்திரன் மகன் செந்தில்குமாா் (36) என்பது தெரியவந்தது.
தொடா்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இவரது நண்பா்களான பெரம்பலூா் சங்குப்பேட்டை, கம்பன் தெரு ராஜ் மகன் ராஜ்குமாா், திருச்சி சிட்டிபாபு மகன் ஆனந்தன் (46) ஆகிய 3 பேரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் செந்தில்குமாா் தனது தாயாா் ராஜேஸ்வரி, மனைவி கவிமஞ்சு ஆகியோரிடம் கொள்ளையடித்துச் சென்ற பொருள்களைக் கொடுத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, செந்தில்குமாரிடமிருந்து நகைகள், அவரது தாய் ராஜேஸ்வரி மற்றும் மனைவி கவிமஞ்சு ஆகியோரிடமிருந்து வெள்ளிப் பொருள்களைக் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து சிட்டிபாபு உள்ளிட்ட 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...