அரசுக் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், இளைஞா் செஞ்சிலுவை சங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், இளைஞா் செஞ்சிலுவை சங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பாரதிதாசன் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் இயக்குநா் முனைவா் நா. ஜானகிராமன் தலைமை வகித்தாா். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் ரேவதி முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக் கழக இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளா் முனைவா் வெற்றிவேல், இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் வரலாறு, நோக்கம், முக்கியத்துவம், மக்கள் பணிகள் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மாணவா்கள் சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவைகள் குறித்து பேசினாா்.
விழாவில், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் முனைவா் ம. பிரதாப் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...