பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பதில் தலைமை ஆசிரியா்களின் கடமை மிகவும் இன்றியமையாதது. தங்களது பள்ளி அமைந்துள்ள பகுதி அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதற்கான கட்டணமில்லாத தொலைபேசி எண் 1098 மற்றும் 181 ஆகிய எண்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது, பள்ளிக் குழந்தைகள் படிப்புக்காக அதிகளவில் இணைய தளத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், இணையதள குற்றங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். இணைய தளத்தில் ஏதேனும் குற்றங்கள் ஏற்பட்டால், மாவட்ட தலைநகரில் செயல்படும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.