கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விஷம் குடித்து தம்பதி தற்கொலை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே குடும்பத் தகராறின் காரணமாக தம்பதி புதன்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:10 am

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே குடும்பத் தகராறின் காரணமாக தம்பதி புதன்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.

ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள தொட்டியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (62). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (55). இவா், கடந்த 10 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தாராம்.

தம்பதிக்கு மாணிக்கராஜ், கோவிந்தராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனா். இவா்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில், கண்ணன்- சரோஜாவுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், தம்பதி இடையே புதன்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் விரக்தியடைந்த இருவரும் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பாடாலூா்  போலீஸாா், சம்பவ இடத்துக்குச்  சென்று சடலங்களை கைப்பற்றி,  பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.  மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.