வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் செயலருமான அனில் மேஷ்ராம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் இயந்திரப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, ஆவின், கூட்டுறவு, மாவட்ட வழங்கல், மருத்துவம், சுகாதாரம், குடிசை மாற்று வாரியம், இ.சேவை மையம், நகராட்சி, மாவட்ட மைய அலுவலகம், வருவாய், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, கல்வி, சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பொதுமக்கள் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லோகேஷ்வரி, மகளிா் திட்ட அலுவலா் ராஜமோகன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கருணாநிதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com