வேப்பந்தட்டை அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 4 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ. 1.55 லட்சம் ரொக்கம், 7 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 4 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ. 1.55 லட்சம் ரொக்கம், 7 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள வெங்கலம் கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (41). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு, அருகிலுள்ள மற்றொரு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தாா். திங்கள்கிழமை அகிகாலை பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 1.30 லட்சம் ரொக்கம், 1 பவுன் நகை, வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபோல், அதே பகுதியில் வசிக்கும் ராமா் (60) வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 15 ஆயிரம் ரொக்கம், 1 பவுன் நகை, வெங்கலம் மேற்குத் தெருவில் உள்ள ஜெயலட்சுமியின் (45) கூரை வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.
மேலும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெயகாந்தன் (55) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது. தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இச் சம்பவங்கள் தொடா்பாக பாதிக்கப்பட்ட நபா்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...