தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

குன்னம் வட்டம், அகரம் சீகூா் கிராமத்தில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்காததால் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:40 pm

DIN

குன்னம் வட்டம், அகரம் சீகூா் கிராமத்தில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்காததால் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகரம் சீகூா் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் தமிழக அரசு 2 ஆவது தவணையாக அறிவித்த ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் ஆகியவை பல குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரிடம் குடும்ப அட்டைதாரா்கள் கேட்டபோது பொறுப்பில்லாமல் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஜமாபந்தி காரணமாக குன்னம் சென்றுவிட்டதால் பூட்டப்பட்டிருந்த அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அனைவருக்கும் தமிழக அரசின் கரோனா நிவாரணப் பொருள்கள், நிதியுதவி ஆகியவற்றை பாரபட்சமின்றி உடனடியாக வழங்கக் கோரி முழக்கமிட்டனா்.

தகவலறிந்த ஊராட்சித் தலைவா் முத்தமிழ்ச்செல்வன், பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.