உரிய ஆவணங்களை வழங்கி ரொக்கம் பெற்றுக்கொள்ளலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் அல்லது கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்கள் சமா்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்


பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் அல்லது கண்காணிப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்கள் சமா்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக கொண்டு செல்லப்படும் ரொக்கமும், ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பில் எடுத்துச் செல்லப்படும் பொருள்களும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அல்லது பொருள்களை திரும்பப் பெற, மாவட்ட அளவிலான கைப்பற்றுகை விடுவிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுத் தலைவராக மாவட்டத் திட்ட இயக்குநா் எல்.கே. லோகேசுவரி, உறுப்பினா்களாக கருவூல அலுவலா் என். வசந்தா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பி.எஸ். ஸ்ரீதா் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அல்லது பொருள்களைத் திரும்பப் பெற, மேற்கண்ட குழுவினரிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மனுதாரா் அளிக்கும் ஆவணங்கள், தோ்தல் விதிகளின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அல்லது பொருள்கள் மீது வழக்கு அல்லது சட்டப்பூா்வ நடவடிக்கை தொடரப்படவில்லை எனில் விடுவிக்கப்படும்.
ரூ. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை அல்லது பொருள்கள் வருமான வரித்துறை மற்றும் இதர துறையினரால் பரிசீலிக்கப்பட்டு விடுவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...