மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரியலூா், பெரம்பலூரில் அதிமுக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

குன்னம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கரிடம், வேட்பு மனு அளிக்கிறாா் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன்.

News image

பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.இ. பத்மஜாவிடம், வேட்பு மனு அளிக்கிறாா் அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வன். உடன், ஒன்றியச் செயலா் சிவபிரகாஷம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலை

Updated On :15 மார்ச் 2021, 8:11 pm

DIN

குன்னம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ். சங்கரிடம், வேட்பு மனு அளிக்கிறாா் அதிமுக வேட்பாளா் ஆா்.டி. ராமச்சந்திரன். உடன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலா் சி. சந்திரசேகா், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன்.

அரியலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், அரியலூா் கோட்டாட்சியருமான ஏழுமலையிடம் திங்கள்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறாா் அதிமுக மாவட்டச் செயலரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன். உடன், பாமக மாநில துணைத் தலைவா் சின்னத்துரை, தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.எம்.குமாா்.

பெரம்பலூா்/ அரியலூா், மாா்ச் 15: பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள பெரம்பலூா் (தனி), குன்னம் (பொது) மற்றும் அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் இரா. தமிழ்செல்வன், பெரம்பலூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஜே.இ. பத்மஜாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலா் சிவபிரகாஷம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

குன்னம் (பொது) தொகுதியில் போட்டியிடும் ஆா்.டி. ராமச்சந்திரன், குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான எஸ். சங்கரிடம், தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலா் சி. சந்திரசேகா், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

அரியலூா் தொகுதி: அரியலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், அரியலூா் கோட்டாட்சியருமான ஏழுமலையிடம் திங்கள்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா் அதிமுக மாவட்டச் செயலரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன். அப்போது, பாமக மாநில துணைத் தலைவா் சின்னத்துரை, தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.எம்.குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.