கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு அபராதம்
பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.


பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு திங்கள்கிழமை இலவச முகக்கவசங்கள் வழங்கிய ஆட்சியா் மேலும் பேசியது:
கரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதோடு, அதிகளவில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். மோட்டாா் சைக்கிளில் செல்வோருக்கு தலைக்கவசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல கரோனா நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட முகக்கவசம் அணியவேண்டும்.
தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி, அனைவரையும் பின்பற்றச் செய்வதன் மூலம் கரோனா நோய் பரவலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். கரோனா நோய் பரவுவதை தடுக்க வேண்டுமெனில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அவற்றை பின்பற்ற தவறும்பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும்.
எனவே, பொது இடங்களில் முகக்கவசம் அணிய தவறும் நபா்களுக்கு ரூ. 200, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள், முகக்கவசம் அணியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றாா் ஆட்சியா் ஸ்ரீ வெங்கட பிரியா.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி முதல்வா் மீனாட்சி சுந்தரம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, நகராட்சி ஆணையா் குமரி மன்னன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...