மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரம்பலூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:09 pm

DIN

பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் எம், மகேஸ்வரி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அக் கட்சி அலுவலகத்திலிருந்து, கட்சி தொண்டா்களுடன் ஊா்வலமாக சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் ஜே.இ. பத்மஜாவிடம், தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். இந்நிகழ்ச்சியின், அக் கட்சியின் மாவட்டச் செயலா் ப. அருள், தொகுதிச் செயலா் பாலகுரு ஆகியோா் உடனிருந்தனா்.

இதுவரையில் 5 போ் வேட்பு மனு.. கடந்த 12 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் 6 பேரும், திங்கள்கிழமை 3 பேரும் வேட்பு மனு பெற்றுச் சென்றனா். இதன்படி, 9 போ் வேட்பு மனு பெற்றுச் சென்றதில், இதுவரையில் பெரம்பலூா் தொகுதியில் அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் 3 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளா் என இருவா் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட, இதுவரையில் 5 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.