பெரம்பலூா் அருகே பலத்த மழையால் 41 வீடுகள் சேதம்
பெரம்பலூா் அருகே பச்சமலை பகுதியில் பெய்த பலத்த மழையால், 41 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.


பெரம்பலூா் அருகே பச்சமலை பகுதியில் பெய்த பலத்த மழையால், 41 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.
பச்சமலை பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இப்பகுதியிலிருந்து வெளியேறிய மழைநீா் பெரம்பலூா் மாவட்டம், மேலப்புலியூா் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது.
இதில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. தகவலறிந்த வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதிக்குச் சென்று, பாதிப்புக்குள்ளான 61 பேரை பாதுகாப்பாக மீட்டு, மேலப்புலியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைத்தனா்.
லாடபுரம் மயிலூற்று அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால், அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஆங்காங்கே குடிசை வீடுகளும், கால்நடை கொட்டகைகளும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆய்வு: மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவும் வருவாய்த் துறையினரை அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...