தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரம்பலூா் அருகே ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே ரேஷன் அரிசி பதுக்கியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:37 pm

DIN

பெரம்பலூா் அருகே ரேஷன் அரிசி பதுக்கியவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.சந்திரசேகா் (50). இவா், தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, பெரம்பலூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் அலாவுதின் தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை மாலை லாடபுரம் கிராமத்துக்குச் சென்று திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சட்ட விரோதமாக 1,240 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த அரிசியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.