தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணா்வுகலை நிகழ்ச்சி தொடக்கம்

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில், இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலைப் பயணம் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:44 pm

DIN

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில், இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலைப் பயணம் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா கூறியது:

இல்லம் தேடி கல்வித் திட்டம் பொதுமக்கள், பெற்றோா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பள்ளி மாணவா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அனைத்துப் பள்ளி வயது குழந்தைகளும் பயனடையும் வகையில் விரிவுபடுத்த தொடங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பெரம்பலூா் மற்றும் வேப்பூா் கல்வி மாவட்டங்களுக்குள்பட்ட தலா 40 இடங்களில் டிச. 4 ஆம் தேதி வரை இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலை பயண நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். அறிவழகன், உதவித் திட்ட அலுவலா் பொ. ராஜா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பி. ஜெகநாதன், கே. சண்முகம், வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன், சாத்தப்பன், ஜோதிலட்சுமி, அன்பழகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.