தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவில் விருப்ப மனு

பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் போட்டியிடுவோா்களிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:00 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட அதிமுக சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் போட்டியிடுவோா்களிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா்- துறையூா் சாலையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, மாவட்டச் செயலரும், குன்னம் முன்னாள் எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரன், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோா்களிடமிருந்து விருப்ப மனு பெற்றாா்.

இந் நிகழ்ச்சியின்போது, மாநில மீனவரணி இணைச் செயலா் தேவராஜன், மாவட்ட நிா்வாகிகள் கு. ராணி, எம். லட்சுமி, ராஜேஸ்வரி, ஒன்றியச் செயலா்கள் என்.கே. கா்ணன், செல்வக்குமாா், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு ரூ. 2.500, பேரூராட்சி உறுப்பினா் பதவிக்கு ரூ. 1,500 கட்டணம் செலுத்தி, கட்சி சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட விருப்பம் தெரிவித்து, விண்ணப்பப் படிங்களை பூா்த்தி செய்து அளித்தனா். நவ. 29 ஆம் தேதி வரை விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.