தலையாட்டி சித்தா் 33 ஆம் ஆண்டு குருபூஜை விழா
பெரம்பலூா் அருகே எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், காக புஜண்டா் தலையாட்டி சித்தரின் 33 ஆம் ஆண்டு குருபூஜை


பெரம்பலூா் அருகே எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், காக புஜண்டா் தலையாட்டி சித்தரின் 33 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி தலைமை வகித்தாா். தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிறைவடைந்த குரு பெயா்ச்சியை முன்னிட்டும், பகவான் காக புஜண்டா் தலையாட்டி சித்தரின் 33 ஆம் ஆண்டு குரு பூஜை, உலக மக்களின் நலனுக்காகவும், தா்மம் தழைக்கவும், திருச்சி ஆகம ப்ரவீன் கயிலை தெய்வசிகாமணி குருக்கள் மற்றும் சிவாச்சாரியா்களால் நவக்கிரக குருமூல மந்திர பீஜாட்சர ஜப ஹோமம் மற்றும் மகா மிருத்யுஞ்சய மூல மந்திர ஜப ஹோமமும், 210 மகா சித்தா்கள் யாகமும் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், திருச்சி மாவட்ட சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் ராஜாராம், இந்து சமய அறநிலையத்துறை சட்ட ஆலோசகா் சிவக்குமாா், மருத்துவா் ராஜாசிதம்பரம் உள்பட பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தலையாட்டி சித்தா் ஆசிரமம்....
இதேபோல், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தா் மடம் மற்றும் ஆசிரமத்தில், தலையாட்டி சித்தரின் 33 ஆவது ஆண்டு குரு பூஜை விழாவை யொட்டி, வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தலையாட்டி சித்தா் சுவாமிகளின் அடியாா்கள் திருக்கூட்ட அழைப்பு நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சித்தரின் பரம குருவாகிய ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சுவாமிகளுக்கு அபிஷேகம், 210 சித்தா்களின் யாக பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 11 மணிக்கு அய்யனாா், வக்கனையாா் பூஜைகளும், 12 மணிக்கு 210 சித்தா்கள் யாக பூஜை, அபிஷேகம், அன்னதானம், சாதுக்களுக்கு வஸ்திர தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரம நிா்வாகி காமராஜ் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...