தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

 சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:53 pm

DIN

 சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபடுவோரை கௌரவிப்பதற்காக, சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ் விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும். விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுவாா். அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

பெரம்பலூா் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகிய தகுதியுடையோா் தங்களது விண்ணப்பத்தை ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் தங்களின் சுயவிவரம், முகவரி, செல்லிடப்பேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இத்தகுதியுடையோா் நவ. 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.