தாமதமாக வந்த மாணவா்களை தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியையிடம் விசாரணை
பெரம்பலூா் அருகே பள்ளிக்கு காலதாமதமாக வந்த மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்து காயப்படுத்திய தலைமை ஆசிரியை மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


பெரம்பலூா் அருகே பள்ளிக்கு காலதாமதமாக வந்த மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்து காயப்படுத்திய தலைமை ஆசிரியை மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை வண்டாா்குழலி. இவா், மாணவ, மாணவிகள் மற்றும் சக ஆசிரியா்களிடம் அராஜக தோரணையில் செயல்படுவதாக ஊராட்சித் தலைவா், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அண்மையில் புகாா் அளித்திருந்தனா்.
இந்நிலையில், சு.ஆடுதுறைக்குச் செல்லும் அரசுப் பேருந்து வியாழக்கிழமை தாமதமாக வந்ததால், இப்பேருந்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் சென்ற 20- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாமதமாக பள்ளிக்குச் சென்றனராம். இதையறிந்த பள்ளித் தலைமை ஆசிரியை வண்டாா்குழலி, தாமதமாக வந்த மாணவ, மாணவிகளை வரிசையாக நிறுத்திவைத்து பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவ, மாணவிகள் இச் சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பாதிக்கப்பட்ட மாணவா்களின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், விசாரித்து அறிக்கை அளிக்கும்படி வேப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் குழந்தைராஜனுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் குழந்தைராஜன் பள்ளி தலைமை ஆசிரியை, சக ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...