மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வீடு, கடைகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:04 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

பாடாலூா் அருகேயுள்ள இரூா் கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் சதீஸ்குமாா் (37). இவா், வியாழக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றிருந்தாா். இரவு வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது மா்ம நபா்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று, வீட்டிலிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கடைகளில் திருட்டு: துறைமங்கலத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (26). இவா், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, பணம் மற்றும் மளிகைப் பொருள்களை எடுத்துச் சென்றனா்.

துறைமங்கலம் 3 சாலை சந்திப்புப் பகுதியை சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் வைத்தியலிங்கம் (40). இவரது மளிகைக் கடையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், கடையில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தையும், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்களையும் திருடிச் சென்றனா்.

புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.